நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியன்மார் நாட்டு பிரதமரை சந்திக்கிறார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

புத்ராஜெயா: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மியன்மார் நாட்டு பிரதமர் ஜெனரல் மின் அங் லயிங்கைச் சந்திக்கவுள்ளார் 

எதிர்வரும் வியாழக்கிழமை தாய்லாந்து நாட்டின் பெங்கொக் தலைநகரில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது 

மியன்மார் நாட்டில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கம் காரணமாக மனிதாபிமான உதவிகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது 

சீனா அதிபர் ஜி ஜின்பிங் அவர்களுடன் சந்திப்பு நடத்தப்பட்டு பிறகு தாம் தாய்லாந்து நாட்டிற்குப் புறப்பட்டு மியன்மார் நாட்டு பிரதமரைச் சந்திக்க போவதாக அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார். 

மேலும், பெங்கொக்கில் ஆசியான் ஆலோசகர் செயற்குழு கூட்டத்திலும் தாம் கலந்து கொள்ளப்போவதாக அன்வார் சொன்னார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset