
செய்திகள் மலேசியா
தேர்தல் சமயத்தில் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டாம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்
புத்ராஜெயா:
தேர்தல் சமயத்தின் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் குறித்த எந்தவொரு அறிவிப்பு செய்ய கூடாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறினார்
தேர்தல் சமயத்திலோ அல்லது வேட்புமனுத்தாக்கல் சமயத்திலோ அரசாங்கம் கேந்திரம், நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது கூடாது. இதுவே அரசாங்கத்தின் முடிவாகும் என்று அன்வார் கூறினார்
கடந்த வியாழக்கிழமை வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங், தாப்பாவில் 33 பொது மேம்பாட்டு, அடிப்படை வசதிகளை உட்படுத்தி 33 திட்டங்களுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் கூறியது தொடர்பில் அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்
உள்ளாட்சி துறையைச் சார்ந்த 16 திட்டங்கள், தேசிய உள்கட்டமைப்பு தொடர்பான 10 திட்டங்கள், தேசிய வீடமைப்பு துறையின் 3 திட்டங்கள் யாவும் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm