நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்போம்: செனட்டர் சரஸ்வதி

புத்ரா ஜெயா:

மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்போம் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.

என் இனிய தமிழ் உறவுகள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் புதிய தெளிவுகள், மகிழ்ச்சி, சந்தோஷம், முழுமையான ஆரோக்கியம்  பெருக என் மனமார்ந்த வாழ்த்துகள். 

நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காக்கும் கடப்பாடு நமக்கு உண்டு. 

இதனை நமது அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. 

மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்கும் அதே வேளையில் இந்த நாட்டின் சுபிட்சத்தையும் மக்களிடையே ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் மகத்தான பொறுப்பையும் நாம் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். 

இந்த இனிய வேளையில் வைசாக்கி, விசு புத்தாண்டை கொண்டாடும் அன்பர்களுக்கும் இனிய  புத்தாண்டு வாழ்த்துகள். 

உங்கள் குடும்பம் மற்றும் உறவுகளுடன் இந்த புத்தாண்டை களிப்புடன் கொண்டாடுங்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset