நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் சிலாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சாலே கால்பி காலமானார் 

லாஹாட் டத்து: 

முன்னாள் சிலாம் ( லாஹாட் டத்து) நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சாலே கால்பி நுரையீரல் தொற்று காரணமாக இன்று அதிகாலை 4.40 மணிக்கு மருத்துவமனையில் காலமானார். 

அவருக்கு வயது 60 ஆகும். கடந்த இரு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அவரின் மனைவி டத்தின் ஃபத்மா அப்துல் அஸிஸ் உறுதிப்படுத்தினார் 

மஸ்ஜித் ஃபிர்டாவுஸ் பள்ளிவாசலில் ஜனாஸாதொழுகை மேற்கொண்ட பிறகு கம்போங் தெருசானில் உள்ள இஸ்லாமிய மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என்று அவர் கூறினார் 

கடந்த 2008 முதல் 2013ஆம் ஆண்டு வரை டத்தோ டாக்டர் சாலே கால்பி சிலாம் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார். 

அன்னாருக்கு ஒரு மனைவியும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset