
செய்திகள் மலேசியா
200க்கும் மேற்பட்ட உலாமாக்களுக்கு பயனளிக்கும் காப்புறுதி திட்டம் தொடர வேண்டும்: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்
ஷா ஆலம்:
200க்கும் மேற்பட்ட உலாமாக்களுக்கு பயனளிக்கும் காப்புறுதி திட்டம் தொடர வேண்டும்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதனை கூறினார்.
எம்எம்ஒய்சி இயக்கத்தின் ஒத்துழைப்புடன் ஈராண்டுகளுக்கு முன் இந்த காப்புறுதி திட்டம் தொடங்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் உலாமாக்கள், உள்ளூர் உலாமாக்களை பாதுகாக்க இத் திட்டம் தொடங்கப்பட்டது.
குறிப்பாக ஆரோக்கிய பிரச்சினை எழும் போது இந்த காப்புறுதி திட்டம் அவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.
அதன் அடிப்படையில் இன்று 200க்கும் மேற்பட்ட உலாமாக்களுக்கு காப்புறுதி அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த காப்புறுதி திட்டத்தை உருவாக்கியது மாரிமுத்து என்பவர். அவர் ஜிமார்ட் காப்புறுதி நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.
மேலும் இந்த காப்புறுதி திட்டத்திற்கான நிதியை பெர்ஜாயா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ வின்செண்ட் டான் வழங்கினார்.
இதன் மூலம் உலாமாக்களுக்கான காப்புறுதி திட்டத்திற்கான அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்தனர்.
இதுதான் மலேசிய மக்களின் ஒற்றுமையின் அடையாளமாகும்.
அதே வேளையில் உலாமாக்களுக்கான காப்புறுதி திட்டம் தொடர வேண்டும்.
இதற்கு சமுதாய மக்கள் கைகொடுக்க வேண்டும் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm