
செய்திகள் மலேசியா
இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை 'முக்மீன்' மீண்டும் நிரூபித்து சாதித்துள்ளது: டத்தோ வீரா ஷாகுல் தாவூத்
ஷா ஆலம்:
இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை முக்மீன் அமைப்பு மீண்டும் நிரூபித்து சாதித்துள்ளது என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.
முக்மின் அமைப்பின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிகவும் விமரிசையாக நேற்று இரவு ஷா ஆலம் ஐ டி சி சி அரங்கில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
என்ன திடீரென ஒரு முக்மின் என்ற பெயரில் இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது?
பெருநாள் திறந்த உபசரிப்பு என்று கூறி மிகப் பெரிய கூட்டத்தை திரட்டி படம் காட்டுகிறார்களா? என்ற கேள்விகள் எல்லாம் எழும்.
ஆனால், பல இயக்கங்களின் பிரதிநிதிகள் ஒன்று திரண்டு தான் இன்றைய நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். முக்மின் அனைவரையும் ஒன்றிணைத்தது.
இதற்கு முக்கிய காரணம் இந்திய முஸ்லிம் சமுதாயம் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நமது உரிமைகளைப் பெற முடியும்.
அதேவேளையில் நம் சமுதாயத்தின் நலன்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.
மேலும் நம் சமுதாய மக்களை நாம்தான் கை கொடுத்து தூக்கி விட வேண்டும்.
இதுபோன்ற பல இலக்குகளைக் கொண்டு இன்றைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சி வெற்றி பெற பேருதவியாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றி.
அதே வேளையில் இரவு பகல் பராமல் உழைத்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.
முக்மின் அமைப்பு தொடங்கப்பட்டு இரண்டு மூன்று மாதங்கள் தான் ஆகிறது.
இருந்தாலும் அந்த அமைப்பின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இன்று மாபெரும் கூட்டம் திரண்டுள்ளது.
இது இந்த அமைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறுவதை விட இந்திய சமுதாயத்தின் ஒற்றுமைக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது என்றுதான் நாம் கருத வேண்டும் என்று அவர் கூறினார்.
முக்மின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பெர்ஜாயா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ வின்சண்ட் டான், மூத்த வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லா, இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm