நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெர்க்யூர் ஹோட்டலின் ரத்த தானத்துடன் மருத்துவ முகாம்; மக்களுக்கு விழிப்புணர்வு தூண்டும் திட்டங்கள் தொடரும்: நிர்வாகி வெங்கடேஷ்

செலயாங்:

மெர்க்யூர் ஹோட்டலின் ரத்த தானத்துடன் கூடிய மருத்துவ முகாம்  சிறப்பான முறையில் நடைபெற்றது.

மக்களுக்கு விழிப்புணர்வு தூண்டும் இதுபோன்ற திட்டங்கள் தொடரும் என்ருஎன்று அதன் நிர்வாகி வெங்கடேஷ் ராவ் கூறினார்.

மெர்க்யூர் சிலாங்கூர் ஹோட்டல், ஐபிஎஸ் டாமன்சரா ஹோட்டலும் இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் முக்கிய அங்கமாக அதிகமான மக்கள் ரத்த தானம் செய்தனர்.

அதே வேளையில் மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் உட்பட பல விழிப்புணர்வு அங்கங்களும் இந்த முகாமில் இடம்பெற்றன.

மேலும் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டிகளும் நடத்தப்பட்டது.

திரளான மக்களும் பிள்ளைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இந்த நிகழ்வின் உச்சகட்டமாக இவ்விரு ஹோட்டல்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒரு மரம் அல்லது செடிகளை நட்டு வைத்தனர்.

இயற்கையை காக்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு தொழிலாளருக்கு ஒரு மரம் என்ற இலக்குடன் என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இவை அனைத்துமே மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் ஆகும்.

வர்த்தகத்துடன் இதுபோன்ற சமூக கடப்பாட்டு திட்டத்தையும் நாங்கள் தொடர்வோம் என்று வெங்கடேஷ் ராவ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset