நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரா உருமாற்ற திட்டத்திற்கு அனுமதி: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல் 

கோலாலம்பூர்: 

மலாய்- பூமிபுத்ராக்களின் முன்னேற்றத்தின் அடிக்கோளாக விளங்கும்  மாரா அதன் உருமாற்றத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார் 

மாரா உருமாற்றத் திட்டத்தின் வரையறையை துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடியிடம் சமர்பிக்கப்பட்டது 

மாரா உருமாற்ற திட்டத்தில் நகர் - புறநகர் மேம்பாடு தொடர்பான விவகாரத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக மாரா தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்தார் 

மாரா உருமாற்று திட்டத்தை இரு குழுக்கள் வழிநடத்துவார்கள். அதில் ஒரு குழுவினர் மாரா தலைமை இயக்குநர் சுல்ஃபிக்ரி ஒஸ்மானுடன் பணியாற்றும் என்று அவர் சொன்னார்

முதல் நிலையில் குழுவை முன்னாள் BNM கவர்னர் முஹம்மத் இப்ராஹிம் வழிநடத்துவார். உடனடி அமலுக்காக இந்த உருமாற்று திட்டத்திற்கு இணக்கம் பெறப்பட்டதாக அஷ்ராஃப் வஜ்டி சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset