
செய்திகள் மலேசியா
இல்லாத முதலீட்டு திட்டத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த பொறியியலாளர்: 156,000 ரிங்கிட்டை இழந்தார்
குவாந்தான்:
சமூக ஊடகத்தில் இல்லாத முதலீட்டு திட்டத்தை நம்பி பொறியியலாளர் ஒருவர் 156,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்
லாபம் வரும் நம்பியிருந்த அந்த நபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது
பெர்நியாகியான் போஸ் என்ற முதலீட்டு திட்டம் மூலமாக கவரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் 10 முறை பண பரிவர்த்தனையை மேற்கொண்டார்
அதிகளவில் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்டவர் போலீஸ் புகார் செய்தார் என்று பகாங் மாநில காவல்துறை தலைவர் டத்தோஶ்ரீ யஹ்யா ஒத்மா கூறினார்
பாதிக்கப்பட்டவர் வேறொருவரிடமிருந்து பணத்தை கடன் வாங்கி தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது
குற்றவியல் சட்டம் செக்ஷன் 420இன் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm