நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவிற்கு வரும் மென்செஸ்டர் யுனைடெட் அணி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் மகிழ்ச்சி

கோலாலம்பூர்: 

இங்கிலாந்து பிரிமியர் லீக்கின் முன்னணி அணியாக விளங்கும் மென்செஸ்டர் யுனைடெட் அணி மலேசியாவிற்கு வருகின்றனர். 

எதிர்வரும் மே 28ஆம் தேதி, புக்கிட் ஜாலில் நேஷனல் ஸ்டேடியத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணி ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியுடன் மோதுகிறது 

மென்செஸ்டர் யுனைடெட் அணி ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் மலேசியர்களை உற்சாகமடைய செய்துள்ளது. 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மென்செஸ்டர் யுனைடெட் வெளியிட்ட பதிவு தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

அனைத்து ஆசியான் நாடுகளும் ஓர் அணியாக இணைந்து பலம் பொருந்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியுடன் மோதுகின்றனர். 

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மென்செஸ்டர் யுனைடெட் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நட்புமுறை காற்போட்டிகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset