
செய்திகள் மலேசியா
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக அரசாங்கம் வருகின்ற திங்கட்கிழமை முடிவெடுக்கும்: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
மலேசியா மீது அமெரிக்கா 24 சதவீத பரஸ்பர வரி விதித்ததைத் தொடர்ந்து அதனைக் கையாளும் நடவடிக்கை குறித்து திங்கட்கிழமை, 14-ஆம் தேதி அரசாங்கம் முடிவு செய்யும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
நாளை நடைபெறும் ஆசியான் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையிலும், இந்த திங்கட்கிழமை நடைபெறும் தேசிய புவி பொருளாதார கட்டளை மையக் கூட்டத்தின் (NGCC) முடிவுகளின் அடிப்படையிலும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஃபஹ்மி தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்கா விதித்துள்ள குறித்து விவாதித்தது.
குறிப்பாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெறும் ஆசியான் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஏப்ரல் 2-ஆம் தேதி, டிரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார்.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வரி விதிப்பு தென்கிழக்கு ஆசியாவில் வாஷிங்டனின் பல வர்த்தக கூட்டாளிகள் மீதான இறக்குமதி வரிகளை நேரடியாக அதிகரித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm