
செய்திகள் மலேசியா
3 வாகனங்கள் உட்படுத்திய விபத்துக்கு காதலனுடன் சென்ற சகோதரியை அண்ணன் துரத்தியதே காரணம்: போலிஸ்
கம்பார்:
காதலனுடன் சென்ற சகோதரியை அண்ணன் துரத்திய சம்பவத்தில் 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
கம்பார் மாவட்ட போலிஸ் தலைவர், முகமது நஸ்ரி தாவூத் இதனை கூறினார்.
நேற்று இங்குள்ள வடக்கு தெற்கு பிளஸ் நெடுஞ்சாலைய்ல் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்து நிகழ்ந்தது.
மற்றொரு காரை துரத்திச் சென்ற சம்பவம், மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் முடிந்தது.
குடும்ப விவகாரங்கள் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக இந்த துரத்தல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஹோண்டா சிட்டி காரை ஓட்டிச் சென்ற ஒருவர், புரோட்டான் எர்டிகா காரில் தனது காதலனுடம் சென்றதாக கூறப்படும் தனது சகோதரியைப் பின்தொடர்ந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை 10.46 மணியளவில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக தனது துறைக்கு இரண்டு புகார்கள் கிடைத்ததும்
மேலும் இந்த விபத்து சமூக ஊடகங்களிலும் வைரலானது என்ருஎன்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm