
செய்திகள் மலேசியா
உம்ரா யாத்ரீகர்கள் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்: சவூதி அரேபியா அறிவிப்பு
ஜெட்டா:
உம்ரா யாத்ரீகர்கள் வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று சவூதி அரேபிய ஹஜ், உம்ரா அமைச்சு அறிவித்துள்ளது.
உம்ரா யாத்ரீகர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான கடைசி நாள் வரும் ஏப்ரல் 13ஆம் தேதியாகும்.
அதே வேளையில் வரவிருக்கும் ஹஜ் பருவத்திற்கு வழிவகுக்க ஏப்ரல் 29ஆம் தேதி சவூதி அரேபியாவை விட்டு அனைவரும் வெளியேற வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருக்கும் எந்தவொரு நபரும் நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
உம்ரா யாத்ரீகர்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள், தொடர்புடைய நிறுவனங்களும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
எந்தவொரு மீறலும் ஒரு குற்றமாகக் கருதப்படும்.
யாத்ரீகர்கள் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக ஒரு நிறுவனம் தெரிவிக்கத் தவறினால்,
பொறுப்பான தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு கூடுதலாக 100,000 சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm