
செய்திகள் மலேசியா
செந்தோசாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஜீவாவின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: டத்தோ கலைவாணர்
கோலாலம்பூர்:
கிள்ளான் செந்தோசாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஜீவாவின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
கடந்த மாதம் 15ஆம் தேதி கிள்ளான் செந்தோசாவில் நிகழ்ந்த சம்பவத்தில் இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாக பரவியது.
சம்பந்தப்பட்ட வீடியோவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவர் ஒருவர் கடுமையாக பாரங்கத்தி வெட்டுக்கு இலக்கானார்.
அவர்தான் ஜீவா. இந்த சம்பவத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார்.
ஜீவாவின் இந்த மறைவு அவரின் குடும்பத்தாருக்கு குறிப்பாக அவரின் தாயாருக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன் மகனை அனுப்பி வைத்த தாயார் இன்று மகன் இல்லாமல் தத்தளித்து வருகிறார்.
வெட்டிக் கொல்லப்பட்ட ஜீவாவின் குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
போலிஸ்படை இதற்கு காரணமானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
இதன் அடிப்படையில் வரும் திங்கட்கிழமை தேசிய போலிஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைனுக்கு மகஜர் வழங்கப்படவுள்ளது.
பல இயக்கங்களின் ஆதரவுடன் நம்பிக்கை இயக்கம் இந்த மகஜரை வழங்கவுள்ளது.
மலேசியாவில் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இந்திய சமுகம் உள்ளது.
இந்த சமூகம் வன்முறையால் அழிந்து விடக் கூடாது என்பது இதன் முக்கிய நோக்கம் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm