நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் கை, கால், வாய்ப்புண் நோய் 10 தடவை அதிகரிப்பு 

கோத்தா பாரு: 

கிளந்தானில் கை, கால், வாய்ப்புண் நோய் 10 தடவையாக அதிகரித்துள்ளது. 

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை இந்த நேர்வு அதிகரிக்கப்பட்டதாக கிளந்தான் மாநில சுகாதார துறை இயக்குநர் டத்தோ டாக்டர் சைனி உசைன் கூறினார் 

ஆறு வயது கீழ்ப்பட்ட சிறார்களுக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மாநிலத்தில் உள்ள 43 சிறார்கள் மழலையர் பள்ளி, பாலர் பள்ளி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டது 

பாதிக்கப்பட்ட சிறார்களின் தோலில் HFMD நோயின் அறிகுறிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார் 

சிறார்களை உட்படுத்திய HFMD நோய் காரணத்தால் பெற்றோர்கள் இந்த விவகாரத்தில் அக்கறை கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset