
செய்திகள் மலேசியா
லம்போர்கினி கார் சாலை போக்குவரத்து துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படவில்லை: ஜே.பி.ஜே தகவல்
கோலாலம்பூர்:
வாகன உரிமம் இல்லாத ஓட்டுநர் ஒருவர் செலுத்தி வந்த லம்போர்கினி காரை சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக வெளிவந்த தகவலை ஜேபிஜே மறுத்துள்ளது
நேற்றிரவு தலைநகர் பங்சாரில் சாலை தடுப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இதில் 28 வயதுடைய உள்ளடக்க நிறுவனர் ஜேபிஜே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த நபருக்கு எதிராக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டதை தவிர லம்போர்கினி காரும் பறிமுதல் செய்யப்படவில்லை.
அடிப்படையற்ற கூற்று தொடர்பாக ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் ஜே.பி.ஜே தரப்பு மன்னிப்பு கோருவதாக அது ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
முன்னதாக, சாலை போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் இதுவரை 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கூட்டரசு பிரதேச ஜே.பி.ஜே இயக்குநர் ஹமிடி அடாம் உறுதிப்படுத்தினார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm