
செய்திகள் மலேசியா
ஹோட்டல், உணவு, பானத் துறையைச் சேர்ந்த முதலாளிகள் சொக்சோ பங்களிப்பில் அதிக அலட்சியம் காட்டுகின்றனர்: அஸ்மான்
கோலாலம்பூர்:
ஹோட்டல், உணவு, பானத்துறையைச் சேர்ந்த முதலாளிகள் சொக்சோ பங்களிப்பில் அதிக அலட்சியம் காட்டுகின்றனர்.
சொக்சோவின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் ஹஜிஸ் முகமது இதனை கூறினார்.
சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள முதலாளிகள் சொக்சோவில் பதிவு செய்து பங்களிக்க மிகவும் தயக்கம் காட்டுவதாகக் கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு முதல் இந்தத் துறை அதிகபட்சமாக 880 வழக்குகள் பதிவாகியுள்ளது.
குறிப்பாக அவர்கள் மீது சம்மன்கள், வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது.
சொக்சோவிற்கு பங்களிப்பதாக கண்டறியப்பட்ட பிற சேவைகள் வாகன பராமரிப்பு வளாகங்கள், அழகு நிலையங்கள் ஆகும்.
இதில் 658 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 590 வழக்குகள் சம்பந்தப்பட்ட உற்பத்தித் துறையும் அடங்கும்.
தங்கள் ஊழியர்களின் நலனைக் கவனிப்பது முதலாளியின் பொறுப்பு.
ஆனால் அவர்களின் சாக்குப்போக்கு அறியாமை, புரிதல் இல்லாமை என்று டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm