
செய்திகள் மலேசியா
உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் பதவிக்கு முகமத் ஹனாபி போட்டி
காஜாங்:
உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தேர்தல் தலைவர் பதவிக்கு முகமத் ஹனாபி போட்டியிடுகிறார்.
நாடு தழுவிய அளவில் கெஅடிலான் கட்சியின் தொகுதி தேர்தல் சூடு பிடித்ததுள்ளது.
இவ்வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு லங்காட் தொகுதி தேர்தலில் இரு அணிகள் களத்தில் இறங்கி உள்ளது.
நடப்பு தலைவர் இராஜன் முனுசாமி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் ஓர் அணியை அமைத்து போட்டியிடுகிறார்.
அதே வேளையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முகமட் ஹனாபி ஒர் அணியை அமைத்துள்ளார்.
இவரின் அணியில் துணை தலைவர் பதவிக்கு முரளி சின்னையா உதவித் தலைவர் பதவிக்கு காடபியும் போட்டியிடுகிறார்கள்.
மகளிர் அணி தலைவி பதவிக்கு கோகிலவாணியும் இளைஞர் அணி தலைவர் பதவிக்கு முகமட் அஸிமுடின் போட்டியிடுகிறார்கள்.
உலு லங்காட் தொகுதி இளைஞர் அணி உதவித் தலைவர் பதவிக்கு லெவின்ராஜ் போட்டியிடுகிறார்.
வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இணையம் வழியாக உலுலங்காட் கெஅடிலான் தொகுதி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
இம்முறை 3,400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்.
இதனிடையே உலு லங்காட் தொகுதியில் உள்ள மக்களுக்கு உரிய சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இம்முறை மீண்டும் போட்டியிடுகிறேன்.
அதன் அடிப்படையில் உறுப்பினர்கள் எனக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என ஹனாபி கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm