நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பலூன் வியாபாரி தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு இடம் கொடுங்கள்: மேயர் மைமுனா

கோலாலம்பூர்: 

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி பலூன் வியாபாரியைத் தாக்கிய மூன்று அமலாக்க அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கோலாலம்பூர் மாநகர மன்றம் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது என்று மாநில மேயர் மைமுனா முஹம்மத் ஷெரீப் தெரிவித்தார்.

தற்போது இந்த விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தைக் காவல்துறை கையாளுகின்றது. 

ஆக, விசாரணை முடியும் வரை தாம் எந்த அறிக்கையும் வெளியிட விரும்பவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். 

பலூன் வியாபாரி தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

பலூன் வர்த்தகர்கள் மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான மூன்று விசாரணை அறிக்கைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக அரசு துணை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset