நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விளையாட்டுத் துறையில் தொழில்முறை நிபுணராக மாற அவசரப்பட வேண்டாம்: ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

விளையாட்டுத் துறையில் தொழில்முறை நிபுணராக மாற யாரும் அவசரப்பட வேண்டாம்.

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை வலியுறுத்தினார்.

தேசிய விளையாட்டு வீரர்கள் இலாபகரமான சலுகைகள் காரணமாக தொழில் வல்லுநர்களாக மாற விரும்புகின்றனர்.

இதனை காரணமாக வைத்து அவர்கள் தேசிய விளையாட்டு நிர்வாகக் குழுவிலிருந்து வெளியேற அவசரப்படக் கூடாது.

இதுபோன்ற முடிவுகள் நீண்டகால பரிசீலனைகளுடன் எடுக்கப்பட வேண்டும்.

காரணம் அவை தொழில் வாழ்க்கையின் எதிர்காலத்தையும் தேசிய விளையாட்டுகளின் வளர்ச்சியையும் உள்ளடக்கியது.

தேசிய மகளிர் பூப்பந்து இரட்டையர் ஜோடியான பியெர்லி தான், தீனா மலேசிய பூப்பந்து சங்கத்தை விட்டு வெளியேறி தொழில் ரீதியாக இடம் பெயர பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான ஊகங்கள் குறித்து கருத்து கேட்டபோது அமைச்சர் இவ்வாறு  கூறினார்.

லாபகரமானதாகத் தோன்றுவதால்  விளையாட்டாளர்கள் குறுக்கு வழிகளை எடுக்க கூடாது.

சங்கத்தை விட்டு வெளியேறுவது இளம் விளையாட்டு வீரர்களின் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பாதிக்கும்.

மேலும் சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

அனைத்து விளையாட்டு வீரர்களும் சங்கத்தின் கீழ் இருந்தனர். 

யாராவது வெற்றி பெற்றால், வருமானம் சேகரிக்கப்பட்டு புதிய திறமைகளை வளர்க்க மீண்டும் பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்.

ஜெட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சிகாம்புட் தமிழ்ப்பள்ளிக்கு  மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset