
செய்திகள் மலேசியா
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மயிரிழையில் நாய் தப்பியது
பூச்சோங்:
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மயிரிழையில் நாய் தப்பியுள்ளது.
பூச்சோங்கில் ஒருவர் வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டு வீசும் வீடியோ வைரலாகி, நெட்டிசன்களின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
மலேசியா விலங்கு சங்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவின்படி, அந்த நபர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசுவதைக் காணலாம்.
அவர் வீசிய குண்டில் ஒன்று பால்கனியில் விழுந்தது. இரண்டாவது ஒன்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த செல்ல நாய் மீது விழுந்தது.
இந்த சம்பவம் ஏப்ரல் 7ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பூச்சோங்கில் நடந்தது.
ஒரு நபர் வீட்டிற்கு தீ வைக்க பெட்ரோல் குண்டை வீசியதால் ஒரு நாய் கிட்டத்தட்ட எரிந்தது.
இந்த சம்பவம் இன்று சிலாங்கூரில் உள்ள பூச்சோங்கில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தற்போது சமூக ஊடங்களில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm