
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய கூட்டணி சார்பில் அப்துல் முஹைமின் மாலேக் போட்டியிடுகிறார்
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய கூட்டணி சார்பில் தாப்பா பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் முஹைமின் மாலேக் போட்டியிடுகிறார்.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் நேற்று இரவு இதனை அறிவித்தார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய கூட்டணி சார்பில் அப்துல் முஹைமின் போட்டியிடவுள்ளார்.
நாங்கள் அறிவித்த வேட்பாளரை தேசிய கூட்டணியால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
பாஸ் கட்சியின் சார்பாக, அனைத்து உறுப்புக் கட்சித் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இடைத்தேர்தலில் ஒரு உள்ளூர் வேட்பாளரை நியமிக்க தேசிய கூட்டணி ஒப்புக்கொண்டுள்ளது.
முஹைமினை ஒரு இளம் வேட்பாளராகவும் சிரியாவில் உள்ள அல் ஃபத்தா அல்-இஸ்லாமிய நிறுவனத்தில் பட்டம் பெற்ற உஸ்தாஸ் என்றும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் அவர் ஆயிர் கூனிங் அல்-குரான் தஹ்ஃபிஸ் மதரஸாவின் முதல்வராகவும் பேரா அல்-குரான் தஹ்ஃபிஸ் மஹாத் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm