நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய சந்தேக நபரைக் காவல்துறை தேடி வருகிறது

பெட்டாலிங் ஜெயா: 

ஈப்போ கம்போங் ராபாட்டிலுள்ள ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக நம்பப்படும் சந்தேக நபரைக் காவல்துறை தேடி வருகிறது.

மார்ச் 26, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசப்பட்டது தொடர்பாக 62 வயதுடைய 5 புகார்களைப் பதிவு செய்துள்ளார் என்று ஈப்போ காவல்துறைத் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் கதவு, கார் நிறுத்துமிடம், வீட்டின் சுவர் ஆகிய பகுதிகளில்  பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

அது மட்டுமல்லாமல், வீட்டின் முன்புறத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு ஒரு குறிப்பும் இருந்ததாக அவர் கூறினார். 

சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், தீயினால் விளைவுகளை ஏற்படுத்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 435 இன் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset