
செய்திகள் மலேசியா
கேபிள் துண்டிக்கப்பட்டதால், கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
பொறுப்பற்ற தரப்பினரால் ரயில் சேவை கேபிள் துண்டிக்கப்பட்டதால் எல்ஐஏ எக்ஸ்பிரஸ், ஈஆர்எல் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
புத்ரா ஜெயா, சைபர்ஜெயா ரயில் நிலையங்களுக்கும் கேல்எல் சென்ட்ரலுக்கும் இடையிலான காலை 6 மணிக்கு 20 நிமிட இடைவெளியில் ஒரு ஷட்டில் சேவை வழங்கப்பட்டுள்ளது.
கேஎல்ஐ முனையம் 1 மற்றும் முனையம் 2, , சலாக் திங்கி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ஷட்டில் சேவை காலை 6.20 மணிக்கு தொடங்கி 20 நிமிட இடைவெளியில் இயங்குகிறது.
பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்தி அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm