
செய்திகள் மலேசியா
பொருளாதாரத்துடன் இணைந்து கலை, கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
பொருளாதார வலிமை கலை, கலாச்சாரத்தை மேம்படுத்துவதோடு இணைந்து செல்ல வேண்டும்.
ஏனெனில் அவை ஒரு நாட்டின், மூகத்தின் ஒருமைப்பாட்டின் சின்னங்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் இஸ்மாயில் ஜெயின் எழுதிய இடைநிலைகள்: கலை, அழகியல் பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர்,
இந்த அம்சத்தை உயர்த்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இல்லாமல் நாகரிகத்தின் வளர்ச்சி முடமாகிவிடும்.
கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தாமல் பொருளாதார அதிகாரமளித்தல் போதாது.
அதே வேளையில் ஒரு நாடு மற்றும் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் நாகரிகத்தின் வளர்ச்சியையும் தீர்மானிப்பது அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வலிமையாகும். இருப்பினும், கலை, கலாச்சாரத்தை மேம்படுத்துவதும் முக்கியமானது.
அதனால் தான் மடானியில் பொருளாதார நிலைத்தன்மை ஒரு தூணாக இருந்தாலும், மனிதகுலத்தின் தனிப்பட்ட மதிப்புகளை உண்மையில் பூர்த்தி செய்யும் படைப்பாற்றல், கருணை, நம்பிக்கை போன்ற பிரச்சினைகளை நான் ஒருபோதும் ஒதுக்கி வைப்பதில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm