நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவியைக் கடித்த கணவன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

கோல பிலா: 

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கடித்து காயம் விளைவித்ததாக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்ட 32 வயதுடைய லீ ஜியா செங் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் 

தனது மனைவியின் கை, முதுகு பகுதியைக் கடித்து காயம் விளைவித்தார் என்றும் இந்த சம்பவம் அதிகாலை 3.20 மணிக்கு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டது 

புகார் அளித்த பாதிக்கப்பட்டவரும்  குற்றஞ்சாட்டப்பட்டவரும் கணவன் - மனைவி என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஜாமின் கோரிக்கை அனுமதிக்கப்படவில்லை 

இருந்தும் பெற்றோர்கள், பெண் குழந்தை பராமரிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் 

நீதிமன்றம் 6 ஆயிரம் ரிங்கிட் பிணைத்தொகையின் அடிப்படையில் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே 15ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset