
செய்திகள் மலேசியா
மாரா அறிவியல் கல்லூரியில் பகடிவதை சம்பவம்; விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது: போலிஸ்
செபராங் பிறை:
மாரா அறிவியல் கல்லூரியில் நிகழ்ந்த பகடிவதை சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.
செபராங் பிறை போலிஸ் படைத் தலைவர் ஜே ஜனவரி சியோவோ இதனை கூறினார்.
நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் தங்கும் விடுதி என்று நம்பப்படும் அறையில் நடந்த பகடிவதை சம்பவத்தின் வீடியோ பதிவு தொடர்பாக போலிஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது.
போலிஸ் சம்பவ இடத்தையும், காணொளியில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கண்காணித்து வருகிறது.
அதே வேளையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்.
இந்த சம்பவம் பினாங்கில் உள்ள மாரா அறிவியல் கல்லூரியில் நடந்ததாக கூறப்படுகிறது.
அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு விசாரணை முழுமையாக நடத்தப்படும்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm