
செய்திகள் மலேசியா
முறையாக செயல்படாத 109 சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன: ங்கா
கோலாலம்பூர்:
நாட்டில் முறையாக செயல்படாத வீடமைப்பு சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.
இதனால் அந்த மேம்பாட்டு நிறுவனங்கள் விற்கும் வீடுகளை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பல்வேறு விதிமீறல்கள் காரணமாக அவை அவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை வேறு பெயர்களில் பதிவு செய்துத் தொடங்கவும் அவற்றின் இயக்குநர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடந்துவரும் கட்டுப்படி விலையிலான வீடமைப்புத் திட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறினார்.
சரிவரச் செயல்படவில்லை என்று கறுப்பு பட்டியலிடப்பட்டுள்ள 109 நிறுவனங்களை அமைச்சின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm