
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் சம்பவத்தை தொடர்ந்து மலேசியா எரிவாயு நிறுவனம் விநியோகக் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது
கோலாலம்பூர்:
புத்ரா ஹைட்ஸ் சம்பவத்தை தொடர்ந்து
செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசியா எரிவாயு நிறுவனம் விநியோகக் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது.
கடந்த வாரம் நிகழ்ந்த சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் தீ விபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து எரிவாயு மலேசியா பெர்ஹாட் எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது.
மெர்பாவ், டுரோனோ, பிறை, ஜுன்ஜங், ஊத்தான் மெலிண்டாங் உள்ளிட்ட பிற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.
மேலும் இது அதிக வாடிக்கையாளர்களைப் பாதிக்கும்.
முன்னர் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு காலம் மாறவில்லை ஏப்ரல் 20 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.
இந்த சம்பவத்தின் விளைவாக செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக புதிய பகுதிகள் மற்றும் கூடுதல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேஸ் மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm