நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் சமுராய் கத்திகளுடன் கலவரம்: 9 பேர் கைது

ஈப்போ:

சமுராய் கத்திகளுடன் கலவரத்தில் ஈடுப்பட்ட 9 பேரை போலிசார் கைது செய்தனர்.

ஈப்போ போலிஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது இதனை தெரிவித்தார்.

ஈப்போவின் ஜெலாபாங் பகுதியில் நேற்று ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் விளைவாக ஆயுதங்கள் பயன்படுத்தி கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரை போலிசார் கைது செய்தனர்.

19 முதல் 41 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் இன்று காலை 6.45 மணியளவில் தனித்தனி இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் 36 வயது உள்ளூர் நபரிடமிருந்து காவல்துறைக்கு ஒரு சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது.

அவர் ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் குறித்த தவறான புரிதலில் இருந்து இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பது ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset