
செய்திகள் மலேசியா
சமூக ஊடகங்களில் இனவாத உணர்வுகளைத் தூண்டிய ஆடவர்களிடம் எம்சிஎம்சி விசாரணை
சைபர்ஜெயா:
சமூக ஊடகங்களில் இனவாத உணர்வுகளைத் தூண்டிய இரண்டு ஆடவர்களிடம் எம்சிஎம்சி விசாரணையை நடத்தியுள்ளது.
மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் 3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை கொண்ட உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதற்காக,
சமூக ஊடாக செல்வாக்கு மிக்கவர், அரசியல் ஆர்வலர் உட்பட இரண்டு நபர்களுக்கு எதிராக நான்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எதிரான விசாரணை நேற்று சைபர்ஜெயாவில் உள்ள எம்சிஎம்சி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
இரண்டு நபர்களில் ஒருவர் பேரா மாநில கீதம், பெட்ரோனாஸ், கேஸ் மலேசியா பெர்ஹாட் ஏகபோகங்களின் மூலம் மலாய் பொருளாதார ஆதிக்கம், கோலாலம்பூர் கோபுரத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்ட இனவாத உணர்வுகளை சமூக ஊடகங்களில் எழுப்பிய ஒரு அரசியல் செல்வாக்குமிக்கவர் ஆவார்.
தடயவியல் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக சந்தேக நபர்களில் ஒருவருக்குச் சொந்தமான கைத்தொலைபேசி, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm