
செய்திகள் மலேசியா
25 ஆண்டுகளுக்குப் பிறகு பாயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறுகிறார் தோமஸ் முல்லர்
முனிச்:
நடப்பு சீசனின் இறுதியில் பாயர்ன் முனிச்சிலிருந்து விலகுவதாக தோமஸ் முல்லர் அறிவித்துள்ளார்.
இது அந்த கால்பந்து கிளப்புடனான 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
35 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்காத கிளப்பின் முடிவுக்கு மரியாதை அளிப்பதாக தெரிவித்தார்.
சிறந்த ஜெர்மன் கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் தோமஸ் முல்லர்,
2000ஆம் ஆண்டில் பாயர்ன் முனிச் இளைஞர் அகாடமியில் சேர்ந்தார். 2008இல் முதன்மை அணியில் தனது அறிமுகத்தைத் தொடங்கினார்.
நிர்வாகி லூயிஸ் வான் காலின் கீழ், அவர் 2010 இல் வழக்கமான தொடக்க வீரராக ஆனார்.
2010 முதல் பாயர்ன் முனிச் கிளப்பின் வெற்றியில் தோமஸ் முல்லர் ஒரு மைய நபராக மாறினார்.
அவர் பாயர்ன் முனிச்சிற்காக 743 போட்டிகளில் பங்கேற்று 247 கோல்களை அடித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm