
செய்திகள் மலேசியா
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காக்க ராஜன் முனுசாமி மீண்டும் போட்டி
உலுலங்காட்:
கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காக்க ராஜன் முனுசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.
2025 – 2028 தவணைக்கான கெஅடிலான் கட்சியின் தொகுதி தலைவர்களுக்கான தேர்தல் 2025 இம்மாதம் நடைபெறவிருக்கிறது.
அதே வேளையில், சிலாங்கூர் மாநில தொகுதி தலைவர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
அவ்வகையில் கெஅடிலான் தொகுதி தலைவர்களுக்கான தேர்தலில் ராஜன் முனுசாமி தனது உலு லங்காட் தொகுதி தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதற்காகப் போட்டியிடுகிறார்.
கடந்த 2007ஆம் ஆண்டு அரசியலில் காலடி வைத்த ராஜன் முனுசாமி இத்தொகுதி மக்களுக்காக பல்வேறு அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகிறார் .
அவர் வகித்த கட்சி பதவிகள் & அவரின் அனுபவங்கள்:
* 2025கெஅடிலான் உலு லங்காட் தொகுதி தலைவர்
* (தொகுதி தலைவர் : 2020 - 2025)
* சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் : 2020 - 2025)
* (தொகுதி துணைத் தலைவர்: 2018 - 2020)
* (கெஅடிலான் உலு லங்காட் இளைஞர் பிரிவு உதவி தலைவர்: 2009 - 2018)
* (கெஅடிலான் சிலாங்கூர் இளைஞர் பிரிவு பொருளாளர் : ஆட்சிக் குழு உறுப்பினர் 2014 - 2016)
தனது அரசியல் பயணத்தில் தலைவர்களோடு இணைந்து மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் உதவிகள் மக்களுக்கு எளிதாக கிடைப்பதற்கு உதவியுள்ளார்.
மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் இவர் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளார்.
இளைஞர் மேம்மாட்டு திட்டங்களை அமல்படுத்தியதுடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.
சுகாதாரம், சமூக நலன், மருத்துவ திட்டங்களை அமல்படுத்தியது. ஆலய நிலத்தை அரசு பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் விவகாரத்திற்குத் தீர்வு கண்டது.
தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கண்டது. வெள்ளம், அடிப்படை வசதி, வீடுகளில் தீ விபத்து உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு வெற்றி கரமாகத் தீர்வு கண்டது.
மித்ரா சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியது.
காஜாங் நகராண்மைக் கழக ரீதியில் இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான செயற்குழுவை
அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
புரோகாவில் மின் சுடலை அமைப்பதற்கு அரசு அனுமதி பெற முயற்சி மேற்கொண்டது.
மக்கள் நலன் மீது இவர் காட்டி வரும் அக்கறை காரணமாக ஒவ்வொரு முறை நடைபெறும் கட்சி தேர்தலின்போதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதன் அடிப்படையில் உலு லங்காட் தொகுதி மக்களுக்கு (செமினி & டுசுன் துவா) மக்களுக்குத் தான் தொடர்ந்து சேவையாற்றுவதற்கு ஏதுவாக இம்முறை தனக்கு உறுப்பினர்கள் பேராதரவு வழங்கி தன்னை வெற்றி பெறச் செய்வர் என ராஜன் முனுசாமி பெரிதும் எதிர்பார்க்கிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm