
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதி மக்கள் டாக்டர் யுஸ்ரியை முழுமையாக ஆதரிப்பார்கள்: டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை
தாப்பா :
ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதி மக்கள் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் யுஸ்ரியை முழுமையாக ஆதரிப்பார்கள்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் யுஸ்ரி பக்கீர் போட்டியிடவுள்ளார்.
இவ்வேளையில் அவருக்கு எனது வாழ்த்துகள்.
தாப்பா அம்னோ செயலாளருமான அவர் மிகச் சிறந்த சேவையாளராக உள்ளார்.
குறிப்பாக கல்வி, பள்ளி மாணவர்களுக்காக திட்டங்களில் அவர் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அவ்வகையில் ஆயிர் கூனிங் வாக்காளர்கள் அவருக்கு முழு ஆதரவு வழங்குவார்கள் என நான் நம்புகிறேன்.
மேலும் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய மஇகா தேர்தல் கேந்திரம் முடக்கிவிடப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் வாக்குகளை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm