நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் தேமு வேட்பாளரின் வெற்றிக்காக அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்கும்: ஜாஹித் நம்பிக்கை

தாப்பா:

ஆயிர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றிக்காக அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்கும்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

ஆயிர் கூனிங் வெற்றி, ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி வெற்றியைத் தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானது.

ஆயிர் கூனிங் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் தேசிய முன்னணி சந்திக்கும்  5ஆவது இடைத் தேர்தலாகும்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு, இது 8ஆவது இடைத்தேர்தல் ஆகும்.

மேலும் நெங்கிரி, மகோத்தாவில் பெற்ற வெற்றியை ஆயிர் கூனிங்கில் ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தலாம்.

அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆட்சிக்கு அனைவரும் முழு ஆதரவு தருவதை இது காட்டுகிறது.

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி உண்மையில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரணி கூறினார்.

ஆனால் அரசியலில் ஒன்றுடன் ஒன்று கூட்டினால் அதற்கு நிறைய அர்த்தம் உள்ளது.

தற்போதைய  சூழ்நிலையில் இதுவொரு அரசியல் போர். இது உண்மைகள்,  மக்களை திருப்திப்படுத்தும் வழிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தல் கேந்திர தொடக்கம், வேட்பாளர் அறிவிப்பு விழாவில் உரையாற்றும்போது அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset