
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் 18,000 வாக்குகளைப் பெற தேசிய முன்னணி இலக்கு கொண்டுள்ளது: மந்திரி புசார்
தாப்பா:
ஆயிர் கூனிங் இடைத் தேர்தலில் 18,000 வாக்குகளைப் பெற தேசிய முன்னணி இலக்கு கொண்டுள்ளது.
பேரா மந்திரி புசாரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாரணி முகமட் இதனை கூறினார்.
வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தலில் குறைந்தது 18,000 வாக்குகளைப் பெறுவதை தேசிய முன்னணி இலக்காகக் கொண்டுள்ளது.
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தேர்தல் கேந்திரங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு,
நாடு முழுவதும் உள்ள கூட்டணியினரின் வலுவான ஆதரவு காரணமாக இந்த இலக்கை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.
15ஆவது பொதுத் தேர்தலின் அடிப்படையில் ஆயிர் கூனிங்கில் தோராயமாக 75 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
மேலும் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 31,897 ஆகும்.
இதில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பால் 15,000 வாக்குகளை பெற முடியும்.
அதே வேளையில் நாடு தழுவிய நிலையிலான தலைவர்களின் ஆதரவால் 18,000 வாக்குகள் இலக்கை அடைய முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm