
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேமு சார்பில் டாக்டர் யுஸ்ரி பக்கீர் போட்டி
தாப்பா:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் யுஸ்ரி பக்கீர் போட்டியிடுகிறார்.
பேரா மந்திரி புசாரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாரணி முகமட் இதனை அறிவித்தார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் 54 வயதான தாப்பா அம்னோ பிரிவு செயலாளர் டாக்டர் யுஸ்ரி பக்கீர் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
தாப்பா அம்னோவில் மிகச் சிறந்த சேவையாளராக அவர் விளங்கி வருகிறார்.
அதே வேளையில் ஆசிரியரான அவர் ஆயிர் கூனிங் உட்பட தாப்பா தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் அவர் உள்ளார்.
அவ்வகையில் ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் சிறந்த வேட்பாளராகவும் அவர் உள்ளார்.
ஆகவே அவருக்கு அனைவரும் முழு ஆதரவு வழங்க வேண்டும்.
தாப்பாவில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில் டத்தோஸ்ரீ சாரணி முகமட் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm