நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொகுதி மக்களுக்கு உதவுவதில் டத்தோஸ்ரீ சரவணன் முன்னுதாரணமாக விளங்குகிறார்: டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி

தாப்பா:

தொகுதி மக்களுக்கு உதவுவதில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

கிட்டத்தட்ட 4 தவணைகளாக தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

5ஆவது தவணையாக போட்டியிட்டு அவர் வெற்றியை கைப்பற்றுவார் என்பது உறுதி.

காரணம் தாப்பா மக்கள் டத்தோஸ்ரீ சரவணனை முழுமையாக ஆதரிக்கின்றனர்.

அதே வேளையில் அவர் தான் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதை நான் நேரடியாக பார்த்தேன்.

மக்களின் இந்த ஆதரவுக்கு அவரின் சேவையே முக்கிய காரணமாக உள்ளது. 

குறிப்பாக நாடாளுமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியை இங்குள்ள அம்னோவுக்கும் ஒதுக்குகிறார்.

அதே வேளையில் தாப்பா தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவர் உரிய சேவையை வழங்கி வருகிறார்.

இந்த சேவையின் மூலம் டத்தோஸ்ரீ சரவணன் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்தவொரு உதாரணமாக விளங்கிறார். அவரின் இந்த சேவை தொடர வேண்டும்.

மேலும் இந்த சேவையின் வாயிலாக ஆயிர் கூனிங்கில் அவர் தேசிய முன்னணியில் வெற்றியை உறுதிப்படுத்துவார்.

குறிப்பாக அவர் இந்தியர்களின் வாக்குகளை அவர் தற்காப்பார் என நம்புகிறேன்.

தாப்பாவில் நடைபெற்ற ஆயிர் கூனிங் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் பேசிய டத்தோஸ்ரீ ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset