செய்திகள் இந்தியா
ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல நடக்க வைத்து, தரையை நக்க வைத்த கொடூரம்
கொச்சி:
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்து, குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூர தண்டனைகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சில ஊழியர்களை கழுத்தில் சங்கிலியால் கட்டி இழுத்து, நாய்களை போன்று நடக்க வைத்திருப்பது வீடியோ மூலம் தெரியவந்திருக்கிறது. நாய் போன்று குரைக்க வேண்டும், தரையில் தூசியை நக்க வேண்டும் என்பன போன்ற கொடூர தண்டனைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கேரள தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
மாத ஊதியம், சிறப்பு படிகள் வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஏராளமான இளம்பெண்கள், இளைஞர்களை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் பணியில் சேர்த்து இருக்கிறது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை.
அதோடு நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. குறைவாக வசூல் செய்த ஊழியர்கள் அடிமைகளை போன்று நடத்தப்பட்டு உள்ளனர். அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் இரு இளைஞர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டு உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
மும்பை மாநகராட்சி தேர்தல்: அழியா மைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் மார்க்கர் பேனா
January 12, 2026, 3:23 pm
மும்பை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து
January 10, 2026, 7:56 pm
ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம்: 6 பேர் காயம்
January 9, 2026, 6:17 pm
இந்தியாவிலேயே காகிதப் பயன்பாடு இல்லாத முதல் நீதிமன்றம்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
