
செய்திகள் விளையாட்டு
தத்தளிக்கும் சி எஸ் கே: சிங்க நடை போட்டு வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்
சென்னை:
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சனிக்கிழமை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது சிஎஸ்கே. இதற்கு முன்னதாக பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுடன் தோல்வியை தழுவி இருந்தது.
முன்னதாக, இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளெஸ்ஸிஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
சிஎஸ்கே பவுலர் கலீல் அஹமது வீசிய முதல் ஓவரில் ஜேக் பிரேசர் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து வந்த அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
அக்சர் படேல் 21, சமீர் ரிஸ்வி 20 ரன்கள் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார். 51 பந்துகளில் 77 ரன்களை அவர் எடுத்தார். 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை ராகுல் விளாசினார். அசுதோஷ் ரன் அவுட் ஆனார். ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.
184 ரன்கள் என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது. கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 3 ரன்களில் ஆட்டமிழந்தார் ரச்சின். ருதுராஜ் 5 ரன்களில் வெளியேறினார். கான்வே 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் சென்னை அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் துபே, ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழந்தனர். பின்னர் தோனி களத்துக்கு வந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய விஜய் சங்கர் அரை சதம் பதிவு செய்தார். தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதன் மூலம் 25 ரன்களில் வெற்றி பெற்றது டெல்லி. இந்த சீசனில் பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் டெல்லி என அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சிஎஸ்கே. அதே நேரத்தில் டெல்லிக்கு இது மூன்றாவது வெற்றியாக அமைந்துள்ளது.
டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், தனது சுழற்பந்து வீச்சாளர்களான விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முழுவதுமாக தலா 4 ஓவர்கள் வீச செய்தார். அதற்கு மாறாக அஸ்வின், நூர் அஹமது, ஜடேஜா என தரமான ஸ்பின்னர்கள் இருந்தும் அவர்களில் ஒருவர் கூட முழுவதுமாக 4 ஓவர்கள் வீசவில்லை. அதை கேப்டன் ருதுராஜ் தவறவிட்டார்.
அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக டாட் பால்களை ஆடியதும் ரன் குவிக்க தவறியதற்கான காரணமாக அமைந்தது.
இன்றைய டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான ஸ்பார்க் சிஎஸ்கே அணியில் அறவே இல்லை என்பது போல இந்த ஆட்டம் அமைந்தது. வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பே இல்லாதது போல சிஎஸ்கே ஆடியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 9:48 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
April 7, 2025, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
April 6, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
April 6, 2025, 9:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
April 5, 2025, 5:01 pm
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி தேர்ந்தெடுக்கப்படலாம்
April 5, 2025, 4:49 pm
கோல தாஹான் மலையேற்றத்தின் போது நெதர்லாந்து பெண் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
April 5, 2025, 4:06 pm
இந்திய இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: பிரபாகரன்
April 5, 2025, 10:15 am
ஜெர்மனி பண்டேஸ் லீக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
April 5, 2025, 10:12 am