
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாஜகவின் வக்ஃபு மசோதாவை ஆதரித்த ஜி.கே.வாசன், இளையராஜா
சென்னை:
நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேற்று (02.04.2025) தாக்கல் செய்தார்.
இந்த விவாதத்திற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. சுமார் 12 மணி நேர தொடர் விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில்நேற்று (03.04.2025) அதிகாலை நிறைவேறியது.
இந்நிலையில் மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு மூலம் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் 128 எம்பிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் 98 எம்பிக்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
இருப்பினும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்த மசோதாவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். மசோதாவின் மீது பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரவாகவும் பேசாமல் எதிராகவும் பேசாமல் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளார்.
அதேநேரம் ஜி.கே.வாசன் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்து வாக்கு செலுத்தியுள்ளார்.
பாமக எம்.பி அன்புமணி இந்த வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அதேபோல நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா பாஜகவின் மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 11, 2025, 6:22 pm
மருதமலை கோயில் வெள்ளி வேல் திருட்டு: தலைமறைவாக இருந்த சாமியார் கைது
April 11, 2025, 4:26 pm
சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குருமூர்த்தியுடன் தீவிர ஆலோசனை
April 11, 2025, 2:45 pm
சைவ, வைணவத்தை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய திமுக அமைச்சர் பொன்முடி: திமுக துணைப்பொ...
April 10, 2025, 2:59 pm
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன்: இ...
April 9, 2025, 5:08 pm
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை: பரபரக்கும் தமிழக அரசியல் களம்
April 7, 2025, 10:38 am
திருச்சி விடுதியில் தங்கியிருந்த மலேசியப் பயணி திடீா் உயிரிழப்பு
April 6, 2025, 6:39 pm
பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதானது: ...
April 6, 2025, 6:32 pm
மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் பாலம் அருகே கருப்புக் கொடி க...
April 5, 2025, 5:43 pm
பொருளாதாரத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது தமிழகம்: ஸ்டாலின்
April 5, 2025, 5:09 pm