நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 

சென்னை: 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் சென்னையில் காலமானார். 

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த தாஜ் மஹால் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான மஜோஜ் பாரதிராஜா வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், அல்லி அர்ஜுனா ஆகிய படங்களிலும் நடித்தார் 

இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார் 

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset