நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

உதகை மலர்‌ கண்காட்சி: மே 16 முதல்‌ 21 வரை 6 நாட்கள் நடக்கிறது

உதகை: 

127-வது மலர்‌ காட்சி, உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில் மே மாதம் 16 முதல்‌ 21 வரை 6 நாட்கள் நடக்கிறது. குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் காட்சி மே 31 மற்றும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில்‌ ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்‌ கோடைவிழா நடக்கும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்‌ மலர்க்காட்சியைக்‌ காண உலகம்‌ முழுவதிலும்‌ இருந்து பல லட்சக்கணக்கான சுற்றுலா பபணிகள்‌ வருகை புரிகின்றனர்‌.

இம்‌ மலர்க்காட்சி மற்றும்‌ இதர காட்சிகள்‌ ஆண்டு தோறும்‌ மலர்க்காட்சி மற்றும்‌ பழக்காட்சி குழுவினரால்‌ காட்சிகள்‌ நடத்துவதற்கான தேதிகள்‌, ஏற்பாடுகள்‌ மற்றும்‌ வரவு, செலவு குறித்தான தீர்மானங்கள்‌ அனைத்தும்‌ மலர்‌ மற்றும்‌ பழக்காட்சி குழுவினரால்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டு அதன்படி செயல்படுத்த ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.  

Ooty Flower Show Botanical Garden - 2023 Ooty Tours

இந்தாண்டு இம்மாவட்டத்துக்கு உலகின்‌ பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரியும்‌ சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்‌ வகையில்‌ நீலகிரி மாவட்டத்தில்‌ 13-வது காய்கறி காட்சி கோத்தகிரியில் மே மாதம் 3 மற்றும்‌ 4-ம் தேதிகளிலும், 11-வது வாசனை திரவிய காட்சி கூடலூரில் 9 முதல்‌ 11-ம் தேதிகளிலும், 20-வது ரோஜா காட்சி, அரசு ரோஜா பூங்காவில் மே மாதம் 10 முதல்‌ 12-ம் தேதி வரையிலும் 127-வது மலர்‌ காட்சி, உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில் மே மாதம் 16-ம் தேதி முதல்‌ 21-ம் தேதி வரையிலும், 65-வது பழக்காட்சி, குன்னூர்‌ சிம்ஸ்‌ பூங்காவில் மே மாதம் 23-ம் தேதி மற்றும்‌ 25-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் காட்சி மே 31 மற்றும் ஜூன் மாதம் 1-ம் தேதி நடக்கிறது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset