
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு...”: பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
சென்னை:
உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-ஆவது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக் கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார்.
அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ்த் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ்ப் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது எங்களின் தாய்மொழியை, எங்களது கலாச்சார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியாகும். இதை யாரேனும் பவன் கல்யாணுக்கு எடுத்துச் சொல்லவும்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2025, 8:17 pm
திமுக, பாஜகவை விமர்சித்துப் பேசிய விஜய் அதிமுக குறித்து பேசாததற்கு காரணம் என்ன?: இபிஎஸ் விளக்கம்
March 29, 2025, 11:29 am
மத்தியில் பாஜக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சிதான் திமுகவின் ஆட்சி: விஜய் குற்றச்சாட்டு
March 22, 2025, 4:34 pm
மணிப்பூர் போல் நாம் ஆக்கப்படுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
March 21, 2025, 4:53 pm
திருச்சியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
March 21, 2025, 4:48 pm