நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சீமான் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது இந்திய உச்சநீதிமன்றம் 

புதுடில்லி: 

நடிகை ஒருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நிலையில் அவருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது 

இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது 

இந்நிலையில், சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பின் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் சம்பந்தப்பட்ட நடிகை மூன்று முறை வழக்கை திரும்ப பெற்றுள்ளார் 

புதிய மாநில அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார் 

இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்று கூறியதுடன், வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset