
செய்திகள் தமிழ் தொடர்புகள்
எழும்பூர், பெரம்பூர் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னை:
அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் வேலைக்காகவும் படிப்புக்காகவும் பல்லாயிரக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஹைதராபாத், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணிகள் காரணமாக எக்மோர், பெரம்பூரில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், வழக்கமாக நின்று செல்லும் செகந்திராபாத், பாட்னா ரயில்களும் சென்னை எழும்பூரிலும் பெரம்பூரிலும் நிற்காது.
அதற்குப் பதிலாக, இந்த ரயில்கள் செங்கல்பட்டு அல்லது திருத்தணியில் நிறுத்தப்படவுள்ளன. சென்னையிலிருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் புவனேஸ்வர் செல்லும் அகர்தலா - எஸ்எம்விடி பெங்களூரு ஹம் சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12504), பெரம்பூரில் நிறுக்காமல் கூடூர் மற்றும் ரேணிகுண்டா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் திருத்தணி இரண்டு இடங்களும் சென்னையின் முக்கிய பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 65 முதல் 80 கி.மீ. தொலைவில் உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
திருத்தணியில் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டதால், பிப்.22 மற்றும் பிப்.25 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட 1,500 பயணிகள், பெரம்பூர் செல்வதற்காக அதிக நெரிசல் கொண்ட உள்ளூர் ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.
திருத்தணியிலிருந்து பெரம்பூருக்கு நேரடியாக இயக்கப்படும் ஈமு ரயில்கள், காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பெரம்பூருக்குச் செல்ல இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஆவதால் பயணிகள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.
அவசரத்தில் பயணிப்பவர்களுக்கு, ரயில் நிலையத்தை அடைவதற்கு வாடகை டாக்ஸி எடுப்பது ஒரே வழியாக இருக்கிறது. டாக்ஸிகளில் செல்வதற்கு ரூ.1800 வரை வசூலிப்பதாகவும், பயணிகளின் தேவையைப் பயன்படுத்தி ஓட்டுநர்கள் கூடுதலாக ரூ.500 வசூலிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm