நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்​தில் அடுத்த 4 நாட்களுக்கு வழக்​கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை மையம்

சென்னை: 

தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் அதிகபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 4 டிகிரி செல்​சியஸ் வரை அதிகமாக இருக்​கக்​கூடும்.

கோடை​காலம் நெருங்கி வரும் நிலை​யில், கோடை காலத்தை போன்று தமிழகத்​தில் வெப்​பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது. 

பிப்​ரவரி மாதத்​திலேயே வெயில் சுட்​டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்பட்​டால் அதை தடுப்​ப​தற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்​மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்நிலை​யில், வரும் 4 நாட்​களுக்கு அதிகபட்ச வெப்​பநிலைவழக்​கத்தை விட அதிகமாக இருக்​கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்ளது.
 
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: 

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களில் இன்று (பிப்​.20) முதல் 25-ம் தேதி வரையிலான 6 நாட்​களுக்கு பொதுவாக வறண்ட வானிலை நிலவக்​கூடும். 

இன்று ஓரிரு இடங்​களில்அதிகபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்​ளது. 

அதனைத் தொடர்ந்து 21, 22, 23 தேதி​களில்ஒருசில இடங்​களில் வழக்​கத்தைவிட 4 டிகிரி செல்​சியஸ் அதிகரிக்​கக்​கூடும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset