
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை:
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிகனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்து, வேளாண், தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஃபெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடர் என்று அறிவித்ததோடு, தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க, ஒன்றிய அரசும் ஃபெஞ்சல் புயலை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஃபெஞ்சல் புயலால் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து, போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட துரித மீட்பு நடவடிக்கைகளினால் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.12.2024 அன்று உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டது.
மேலும், புயலால் பாதிப்பிற்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க பல்வேறு துறைகளுக்கு 80 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவித்தும், சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm