செய்திகள் கலைகள்
நடிகை பலாத்கார வழக்கு: நடிகர் முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
திருவனந்தபுரம்:
நடிகை பலாத்கார வழக்கில் பிரபல மலையாள நடிகர் முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகரும், கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ், மலையாள நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதாக கூறி தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக ஆலுவாவைச் சேர்ந்த ஒரு மலையாள நடிகை சமீபத்தில் போலீசில் புகார் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து முகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் முகேஷ் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதன்படி விசாரணைக்கு ஆஜரான முகேஷை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த தனிப்பிரிவு போலீசார் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நடிகையை பலாத்காரம் செய்தது தொடர்பாக மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் உள்பட டிஜிட்டல் ஆதாரங்களும், சில சாட்சிகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 4, 2025, 3:39 pm
நடிகர்கள் மாதவன், நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது
February 4, 2025, 12:47 pm
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம்: டிக்கெட் முன்பதிவில் மலேசியா சாதனை
February 3, 2025, 2:51 pm
அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகும் நடிகர் சிலம்பரசன்: பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அப்டேட்டுகள்
February 3, 2025, 2:41 pm
நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு புதிய வீடியோ வெளியீட்ட தக் லைஃப் படக்குழுவினர்
February 1, 2025, 8:14 am
Mrs. World 2025 : போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்
January 30, 2025, 8:27 pm
பராசக்தி தலைப்பு பஞ்சாயத்து: தலைப்பை மாற்றக்கோரி அகில இந்திய சிவாஜி மன்றம் கோரிக்கை
January 30, 2025, 8:26 pm
நடிகர் சிவகார்த்திகேயனின் 25ஆவது படம் பராசக்தி: எஸ்.கே ரசிகர்கள் உற்சாகம்
January 24, 2025, 10:54 am
நடிகர் சிவகார்த்திகேயனின் 25ஆவது திரைப்படம்: பராசக்தி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்
January 23, 2025, 10:49 am