செய்திகள் மலேசியா
சரவா மாநிலத்தில் மோசமான வெள்ளம்; 4,826 பாதிப்பு: சரவா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அறிவிப்பு
கூச்சிங்:
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 4,826 ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள் அனைவரும் 1,366 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று சரவா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 41 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
41 வெள்ள நிவாரண மையங்களில் செரியானில் ஆக அதிகமாக 15 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
பிந்துலுவில் 7, கூச்சிங்கில் 5, சமரானில் 5, மீரியில் 5, சிபுவில் 5 மையங்களும் திறக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில், இன்று மாநிலம் முழுவதும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இதனிடையே சபா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 2714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2025, 10:51 pm
இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவருடன் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி: நல்லிணக்க சந்திப்பு
January 30, 2025, 8:23 pm
ஜப்பானில் காணாமல் போன மலேசிய மாணவி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார்
January 30, 2025, 8:22 pm
மழலையர் பள்ளியின் வேலியை மோதி தள்ளிய ஆடவன் போதைப்பொருளுடன் பிடிப்பட்டான்
January 30, 2025, 8:21 pm
கேளிக்கை விடுதி முன் பொதுமக்களை மோதி தள்ளிய சம்பவம்: காவல்துறையினரால் நால்வர் கைது
January 30, 2025, 6:04 pm
மற்றவர்கள் போலவே நஜிப்பும் அனைத்து வாய்ப்புகளுக்கு தகுதியானவர்: ஊழல் எதிர்ப்பு அரசு சாரா அமைப்பு
January 30, 2025, 4:05 pm
பத்துமலையில் பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது: கோபி
January 30, 2025, 11:57 am
ஜப்பானில் மலேசிய மாணவி திங்கள்கிழமை முதல் காணாமல் போனதாக புகார்
January 30, 2025, 11:43 am